நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 300க்கும் அதிகமான ‘கிச்சன் சீக்ரெட்களை’ வரிசைப்படுத்தி சொல்லும் புத்தகம். விதவிதமான ரெசிப்பி (சமையல் குறிப்பு) புத்தகங்கள் தமிழில் ஏராளமாக உள்ளன. இது வழக்கமான சமையல் புத்தகம் அல்ல!! சின்னசின்ன டிப்ஸ்களை, 12 பகுதிகளாக, ஏராளமான துணை தலைப்புகளோடு பட்டியலிட்டு சொல்லும் மினி என்சைக்ளோபீடியா. எப்பொழுது சந்தேகம் என்றாலும், சந்தேகத்தை விரைவில் தீர்க்கும் வகையில் ‘கிச்சன் சீக்ரட்ஸ் : அசத்தலான சமையலறை டிப்ஸ் ’ புத்தகத்தின் உள்ளடக்கம் (Index) அமைந்துள்ளது. பகுதிவாரியாக சமையலறை டிப்ஸ்கள் தொகுக்கப்பட்ட புத்தகம் தமிழில் அரிது! அதற்கான முயற்சிதான் இந்த மின்நூல்.
கீழேயுள்ள கேள்விகளுக்கான எளிய தீர்வுகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன: பெரிய கடைகளில்தான் மளிகைப் பொருட்களையும், காய்கறியும் வாங்குறோம். பயன்படுத்தும்போதுதான் தரமில்லை என்றோ, கலப்படம் என்றோ தெரியவருகிறது. எப்படி பார்த்து வாங்குவது?
இந்தப் புத்தகத்தில், கீரைகள், காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், பயன்படுத்தும் போது தெரிந்துகொள்ள வேண்டிய குறிப்புகள், அத்துடன், வாங்கியவற்றை பாதுகாக்க, கலப்படத்தைக் கண்டுபிடிக்க அசத்தலான ஐடியாக்கள் என உங்களை ஸ்மார்ட் ஆக மாற்றும் ஏராளமான tips & tricks அடங்கியுள்ளன.
எல்லோருக்கும் தெரிந்த அதே சமையல் குறிப்பு. Recipe-ல சொன்ன மாதிரியே செஞ்சாலும் ருசி வருவதில்லை. ருசிக்கு என்ன ரகசிய பார்முலா?
சமையலில் ருசி.. அத்தனையும் ஈஸி… என சுவைக்கான ஏராளமான ரகசியங்களை அடுக்குகிறது இந்தப்புத்தகம். அத்துடன் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கான அசத்தல் டிப்ஸ்களும் அடங்கியுள்ளது.
சமையலறை பராமரிப்புதான் பெரிய பிரச்சினை. பாத்திரங்கள், மின்சாதன பொருட்கள் பாதுகாப்பதில் தொடங்கி, கரப்பான் பூச்சி, வண்டு எல்லாம் சேர்ந்து தினசரி நம்மை டென்ஷன் ஆக்கும் விஷயங்கள் ஏராளம். இதற்கு என்ன தீர்வு ?
மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோவேவ் அடுப்பு, இண்டக்ஷன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் இத்யாதி இத்யாதி மின்சாதன பொருட்களோடு, சமையலறை சாதனங்கள் என அனைத்தும் ரிப்பேர் ஆகாமல் நீண்ட நாட்களுக்கு உழைக்க அட்டகாசமான ஐடியாக்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய தீர்வுகளுடன் ‘ஓட ஓட விரட்டி பூச்சித்தொல்லை இல்லாம இருக்க’தேவையான வழிமுறை இந்த மின்நூலில் உள்ளது .
மொத்தத்தில் இது ஒரு கம்ப்ளீட் கிச்சன் கைடு ! படிப்பவர்களுக்கு பிடிக்கும்! பயனுள்ளதாக இருக்கும்!!
ஆசிரியர் முன்னுரையிலிருந்து “சமையலில் எக்ஸ்பர்ட்டானவர்கள்கூட சமையலறைக்கு தேவையான பொருட்களை வாங்கும்பொழுதோ அல்லது வாங்கிய பொருட்களை பாதுகாப்பதிலோ கோட்டை விடுவதை பார்த்திருக்கின்றோம். அதுமட்டுமா? அவ்வப்பொழுது பத்திரிக்கை, டிவி அல்லது இணையத்தில் சின்ன சின்ன டிப்ஸ் பார்க்க நேரிடுகிறது. தேவையான சமயத்தில் அந்த குறிப்புகள் ஞாபகத்துக்கு வருவதில்லை. அவ்வளவு ஏன்! நம் அம்மாவோ, வீட்டில் உள்ள பெரியவர்களோ அடிக்கடி சொன்ன கிச்சன் சீக்ரெட்டுகள் கூட அவசரத்தில் நினைவுக்கு வருவதில்லை! இன்னும் சிலருக்கு, கண்ணில் படுகின்ற குறிப்புகளை எல்லாம் ஏதாவது ஒரு நோட்டில் எழுதி வைக்கும் பழக்கம் உண்டு. ஆனால், அவசரத்துக்கு, அந்த குறிப்புகளை தேடி எடுக்க வேண்டுமென்றால் கிடைப்பதில்லை. அதற்கான ஒரு எளிய தீர்வு தான் இந்த புத்தகம்”
– சாந்தி சிவகுமார்
About This BookKitchen Secrets (Tamil e-book), unfolds amazing tips on how to manage your kitchen more efficiently, with minimum effort. In this book, you will find useful resources based on the following topics which will help you grow smarter :
Tips to Buying Vegetables
Tips to Prepare Vegetables Before Cooking
Ultimate Spinach Guide
Taste-enriching Cooking Secrets
Idly, Dosa Tips
Chapathi,Poori Tips
Useful Ideas to Protect Grocery
Kitchen Maintenance
Detect Food Adulteration
Kitchen Electrical









